மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிமுக கொறடா உத்தரவு: 134 எம்.எல்.ஏ., க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்



Feb 17, 2017

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நாளை(18.02.17) நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் ஓ.பி.எஸ் அணியினர் வலியுறுத்தினர்.

Siragu admk-mla

நாளை நடைபெற உள்ள சட்டசபை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 134 பேரும் கலந்துகொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தவறும் எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக இன்று கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,-க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் கொறடா ராஜேந்திரன்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிமுக கொறடா உத்தரவு: 134 எம்.எல்.ஏ., க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்”

அதிகம் படித்தது