மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அந்தமானில் காற்றழுத்த தாழ்வு நிலை: பாம்பனில் புயல் எச்சரிக்கை



Apr 15, 2017

தென்மேற்கு வங்கக்கடல் அந்தமான் பகுதியில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது தற்போது காற்றழுத்த தாழ்வாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்தக் தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

Siragu meteorological

நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இரண்டு நாட்களில் புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பாம்பன், நாகை துறைமுகங்களில் 1ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை கடல் பகுதியிலேயே நிலை கொண்டிருப்பதால் தரைப் பகுதியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். எனவே வட தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகம் போன்ற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அந்தமானில் காற்றழுத்த தாழ்வு நிலை: பாம்பனில் புயல் எச்சரிக்கை”

அதிகம் படித்தது