அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு
Jan 7, 2017
அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வர்ஜீனியா- ரிச்மண்ட் நகரில் தமிழர்கள் ஒன்று திரண்டனர். இதில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தவர்களும் இணைந்தனர்.
அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு திரட்டி வரும் சமூக ஆர்வலர் கவிதா பாண்டியன் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.
அமெரிக்காவில் 3700க்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து வாங்கிய மனுவை வாஷிங்டன்னில் உள்ள இந்திய தூதரகத்தில் வழங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராளி கார்த்திகேய சிவசேனாதிபதி பல்வழி தொலை தொடர்பு கருத்தரங்கிற்கு உலகத் தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஜல்லிக்கட்டின் தொன்மை எடுத்துக்கூறப்பட்டது.
இதையடுத்து நியூயார்க் பங்குச்சந்தை காளை அருகே ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழகர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு திரட்டினர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு”