மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அரசியல் கட்சிகள், நன்கொடையாக ரூ.2000 வரை மட்டுமே ரொக்கமாகப் பெற முடியும்



Feb 1, 2017

நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டில் விவசாயக்கடன், கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. இந்த பட்ஜெட்டில் அரசியல் கட்சிகள் அதிகபட்சமாக ரூ.2000 மட்டுமே ரொக்கமாக பெற முடியும்.

Siragu india budjet 2017-3

இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமாக பெற வேண்டுமென்றால் செக் அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமாகவேப் பெற முடியும். இதற்குத் தக்கபடி ரிசர்வ் வங்கி சட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே வருமான வரியில் விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கு முன்பு வரை அரசியல் கட்சிகளுக்கு இருபதாயிரம் ரூபாய் வரை ரொக்கமாக நன்கொடை கொடுக்கலாம் என்று இருந்தது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசியல் கட்சிகள், நன்கொடையாக ரூ.2000 வரை மட்டுமே ரொக்கமாகப் பெற முடியும்”

அதிகம் படித்தது