மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு கட்டுப்பாடு



Apr 28, 2017

ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு நாளை(29.04.17) மற்றும் நாளை மறுநாள்(30.04.17) நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்க்கான தேர்வு நாளையும், பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இத்தேர்வு மூன்றாண்டுக்குப் பிறகு நடைபெறுகிறது.

Siragu tet exam

மாநிலம் முழுவதும் 8.47லட்சம் பேர் பங்குபெறும் இத்தேர்வு 1861 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு பட்டதாரி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உள்ள மூன்றாயிரம் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் காலை 7.30 மணிக்கே வந்து விட வேண்டும் என்றும், தேர்வு முடியும் வரை விடைத்தாளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு கட்டுப்பாடு”

அதிகம் படித்தது