மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு



Feb 16, 2017

எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்தார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தி வந்தார்.

Siragu palanichami

இதையடுத்து ஓ.பன்னீர் செல்வமும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறித்தி வந்தார். இந்நிலையில் இன்று(16.02.17) ஆளுநர், எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து பேசினார்.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர். அதன்படி இன்று மாலை 4 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்டுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு”

அதிகம் படித்தது