மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆளுநரை சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்



Feb 9, 2017

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னைக்கு இன்று வந்த நிலையில் மாலை 5 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மதுசூதனன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் உட்பட 10 பேர் சென்றனர்.

Siragu ops

இந்த சந்திப்பில் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்யப்பட்ட விவரம் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சந்திப்புக்குப் பின் சசிகலாவை இரவு 7.30 மணியளவில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநரை சந்திக்க எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் அழைத்துகொண்டு ஆதரவு கடித்தத்தை கொடுக்கலாம் என்று தீர்மானித்திருந்தார் சசிகலா. ஆனால் சசிகலாவுடன் 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆளுநரை சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்”

அதிகம் படித்தது