மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய கடலோர காவல்படை அதிரடி: எண்ணூர் அருகே விபத்திற்குள்ளான கப்பல்கள் சிறைபிடிப்பு



Feb 3, 2017

கடந்த 28ம் தேதி சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு மும்பையிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் மீது ஈரான் கப்பல்மோதியது. இதனால் மும்பையிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்சேதமடைந்து கச்சா எண்ணெய் கடலில் பரவியது.

Siragu oil

சென்னை எண்ணூரிலிருந்து திருவான்மியூர் வரை உள்ள கடற்பரப்பு மாசடைந்துள்ளது.இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பலியாகியது. கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மீனவர் நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில் கச்சா எண்ணெய் கடலில் பரவியதால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நூறு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விபத்திற்குக் காரணமான இரு கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வழக்கில் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி சுந்தர், கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து இந்திய கடலோர காவல்படை எண்ணூர் அருகே விபத்திற்குள்ளான இரண்டு கப்பல்களை சிறைபிடித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய கடலோர காவல்படை அதிரடி: எண்ணூர் அருகே விபத்திற்குள்ளான கப்பல்கள் சிறைபிடிப்பு”

அதிகம் படித்தது