மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

சிறகு நிருபர்

Feb 20, 2021

siragu kamala harris1

அக்டோபர் 20, 1964ல் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் பிறந்த கமலா ஹாரிஸ் –ன் தாயார் சியாமளா கோபாலன் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கமலா ஹாரிஸின் தாயார் தனது 19 வது வயதில் பட்டப்படிப்புக்காக தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்று 1964ல் முனைவர் பட்டம் பெற்றார். அங்கேயே குடிபெயர்ந்தார். இவர் மார்பக புற்றுநோய் மரபணு ஆய்வில் ஈடுபட்டவர்.

கமலா ஹாரிஸ், கியூபெக்கில் உள்ள வெஸ்மவுண்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மேற்படிப்பை ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டிங்ஸ் காலேஜ் ஆப் லாவில் ஜூரிஸ் டாக்டர் பட்டம் பெற்றார். கலிபோர்னியாவில் உள்ள அலமேடா கவுண்டியில் துணை மாவட்ட வழக்கறிஞராக 1990 முதல் 1998 வரை பணியாற்றினார்.

2000ம் ஆண்டு சமூக மற்றும் சுற்றுப்புற பிரிவின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார் கமலா ஹாரிஸ். 2003ம் ஆண்டு நடைபெற்ற பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞர் தேர்தலில் வெற்றி பெற்று மாவட்ட வழக்கறிஞர் ஆனார். தேசிய கறுப்பு வழக்குரைஞர் சங்கத்தின் துர்கூட் மார்ஷல் விருது 2005 ல் வழங்கப்பட்டது. 2007ல் மீண்டும் நகர வழக்கறிஞர் ஆனார்.

கமலா ஹாரிஸ் 2009ம் ஆண்டு ஸ்மார்ட் ஆப் க்ரைம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். 2010ல் நடைபெற்ற கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் தேர்தலில் வெற்றி பெற்று ஜனவரி 3 2011 ல்அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றார். 2016ல் கலிபோர்னியாவில் நடைபெற்ற செனட் தேர்தலில் வெற்றி பெற்றார்.

சமீபத்தில் 11 ஆகஸ்ட் 2020ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றார். இவர் துணை அதிபராக கமலா ஹாரிஸை அறிவித்தார். இதன் மூலம் முதல் பெண் அமெரிக்க துணை அதிபர் என்ற பெருமையைப் பெற்றார். மக்களாட்சி கட்சியின் உறுப்பினரான இவர் அமெரிக்காவின் துணை அதிபராக சனவரி 20, 2021 ல் பதவியேற்றார்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ்”

அதிகம் படித்தது