மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இரட்டை இலைக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் மேலும் 3 பேருக்கு சம்மன்



Apr 28, 2017

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா கைது செய்யப்பட்டனர்..

Siragu dinakaran1

முதற்கட்டமாக சென்னையில் இரண்டு நாட்களாக டிடிவி தினகரனை காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது டெல்லி போலிஸ். தினகரனின் வீடு மற்றும் அவரது நண்பர்களின் வீடு என பல இடங்களில் விசாரணை நடத்தி வருகிறது டெல்லி போலிஸ்.

டிடிவி தினகரனிடம் நடைபெற்ற விசாரணை அடிப்படையில் மேலும் மூன்று பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது டெல்லி போலிஸ். அதனடிப்படையில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகன், தனியார் செல்போன் நிறுவன மேலாளர் டேனியல், திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த கோபி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் விசாரணை முடிந்த பிறகு,பெங்களூர், கொச்சி போன்ற இடங்களுக்கு டிடிவி தினகரனை அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட உள்ளதாக டெல்லி போலிஸ் திட்டமிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரட்டை இலைக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் மேலும் 3 பேருக்கு சம்மன்”

அதிகம் படித்தது