இரட்டை இலை சின்னம் விவகாரம்: சுகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி
May 22, 2017
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் வழங்கியாதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டு, பின் டிடிவி தினகரன், இவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா, சுகேஷ் ஆகியோரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மறு தேர்தல் தொடர்பாக டிடிவி தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவுதங்களிடம் இருப்பதாக டெல்லி காவல் துறை நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் இவ்வழக்கில் சுகேஷ் முக்கியமான குற்றவாளி என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என்று அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
டிடிவி தினகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் இம்மனு மீதான விசாரணை வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரட்டை இலை சின்னம் விவகாரம்: சுகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி”