மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இரட்டை இலை தொடர்பாக லஞ்சம் அளித்த டிடிவி தினகரன்: டெல்லி காவல்துறை சென்னை வருகை



Apr 17, 2017

இரட்டை இலை சின்னம் யாருக்கு அளிப்பது என்ற விசாரணையில் தேர்தல் ஆணையம் இச்சின்னத்தை முடக்கியது. இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே வழங்க வேண்டும் என்று ரூ.1.03 கோடி லஞ்சம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Siragu dinakaran1

அதன்படி டெல்லி தொழிலதிபர் சுகேஷ் சந்திராவிடம் டிடிவி தினகரன் ரூ. 1.03 கோடி அளித்ததாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து டெல்லி ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதற்காக ரூ. 60 கோடி வரை பேரம் பேசப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்ற சுகேஷ் சந்திராவிடம் இருந்த ரூ.1.03 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து டிடிவி தினகரன் விளக்கம் அளிப்பதற்கான சம்மனுடன் டெல்லி காவல்துறை உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் சென்னைக்கு புறப்பட்டார். டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தியபின் அவர் கைதாவாரா என்பது தெரியவரும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரட்டை இலை தொடர்பாக லஞ்சம் அளித்த டிடிவி தினகரன்: டெல்லி காவல்துறை சென்னை வருகை”

அதிகம் படித்தது