மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இரண்டாவது நாளாக நெடுவாசல் போராட்டம்



Apr 13, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து நெடுவாசலில் போராட்டம் துவங்கியது.

Siragu-neduvasal2

போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மத்திய மாநில அரசுகள், மக்களின் அனுமதியின்றி இத்திட்டம் செயல்படாது என்று அறிவித்தது. தொடர்ந்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் துவங்குவதற்கு மத்திய அரசு கையெழுத்திட்டது. எனவே மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர் நெடுவாசல் மக்கள்.

நேற்று துவங்கிய நெடுவாசல் போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். காவல்துறை கலைக்க முயற்சித்தும் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் நெடுவாசல் மக்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரண்டாவது நாளாக நெடுவாசல் போராட்டம்”

அதிகம் படித்தது