மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கை கடற்படை: தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை



Mar 7, 2017

இந்திய கடல் எல்லைப்பகுதியில் நேற்று இரவு ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Siragu fishermen- murder2

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரிட்சோ(22)என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்ற ஓட்டுநர் காயமடைந்தார். இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தியதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்தது இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம்.

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக சொல்வதில் உண்மை இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. மேலும் இந்திய அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கை கடற்படை: தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை”

அதிகம் படித்தது