மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கை: மீனவர் கொலை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும்



Mar 8, 2017

இந்தியப் பெருங்கடல் ரிம் கழகத்தின் (ஐ.ஓ.ஆர்.ஏ) இரண்டு நாள் மாநாடு இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி சென்றுள்ளார்.

Siragu Ansari with Srisena

அம்மாநாட்டில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா-வும் கலந்து கொண்டார். அங்கு இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்து பேசினார்.

அச்சந்திப்பில் மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக பேசினர். அதில் இலங்கை கடற்படை சார்பில் எந்த தாக்குதல் நடத்தப்படவில்லை, எனினும் இது தொடர்பாக முழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி இது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை நடந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்தார் இந்திய துணை ஜனாதிபதி அன்சாரி. மேலும் மீனவர்கள் கைது தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கை: மீனவர் கொலை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும்”

அதிகம் படித்தது