மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலவச எரிவாயு திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம்



Mar 8, 2017

உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் ஐந்து கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

siragu-aadhar

இத்திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்புக்காக வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்ற சான்றிதழை விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் தற்போது பிரதமரின் உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக எரிவாயு இணைப்புகளை பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புகைப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, பாண் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், விவசாய வங்கிக்கணக்கு போன்றவற்றின் நகலையும் இலவச எரிவாயு சிலிண்டர் பெற விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி மே 31 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலவச எரிவாயு திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம்”

அதிகம் படித்தது