மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இவரைத் தெரியுமா? சாக்கிலி இல்லமா

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Oct 7, 2017

Siragu chakali ilamma1

தெலுங்கானா ஹைதராபாத் மாநிலத்திலுள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட பிரதேசமாகும். இப்பகுதி நிலப்பிரபுத்துவ மேட்டிமை வர்க்கத்தினரால் ஆளப்பட்டு வந்தது.

ஜாகிர்தார், நேர்முக மற்றும் குத்தகை அமைப்பும் அதன் காரணமாக நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நடப்பில் இருந்தன.

தெலுங்கானா மக்கள் அடிமைத்தனமான ஒரு வாழ்வையே நடத்தினர்.

நிலப்பிரபுக்களைக் காணும் போது “எஜமானனே இங்கே இருக்கிறேன் உங்கள் அடிமை உங்கள் கால்களை நான் தொடுவேனாக” என்று ஒவ்வொரு சாதாரண மனிதனும் வார்த்தைகளை வெளிப்படுத்துவது அவர்களின் பரிதாபமான நிலைமையையும் அவர்கள் அனுபவித்து வந்த ஒடுக்குமுறை தன்மையினையும் பிரதிபலிப்பதாய் இருந்தன.

தெலுங்கானாவின் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் நிஜாம் நவாப்புக்குச் சொந்தமாக இருந்தன, அதே நேரத்தில் எஞ்சிய 50% நிலம் பெரும் நிலப்பிரபுக்களின் கைகளில் இருந்தன.

மொத்த மக்கட்தொகையில் பணக்கார, மத்தியத்தர மற்றும் சிறு விவசாயிகளைத் தவிர எஞ்சிய 50% நிலமற்ற மக்களாவர், அவர்கள் அனுபவித்த அடிமைத்தனமானது நமது தலைமுறையினரின் கற்பனைக்குக்கூட எட்டாத ஒன்றாகும்.

லம்பாடா பழங்குடியினரான உழவர்கள் காட்டாறு ராமச்சந்திரராவ் என்பவரின் நிலத்தில் குத்தகைக்குப் பயிரிட்டு வந்தனர்.

குத்தகைக் காலம் முடிவடைந்துவிட்டது என்றாலும் விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேறத் தயாராக இல்லை.

அவர்கள் நிலப்பிரபுவின் முயற்சிகளை எதிர்த்துத் தங்கள் நிலங்களில் குத்தகை அடிப்படையில் பயிரிடுவதற்கான தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளத் தயாராயினர்.

நிலப்பிரபுக்கள், காவல்துறையினர், குண்டர்கள் ஆகியோரைக் கொண்டு விவசாயிகளைத் தாக்கினர்.

லம்பாடா பழங்குடியினர் மரபு வழிப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு காவல்துறையினரையும், குண்டர்களையும் எதிர்த்தனர்.

அவர்கள் தடிகளை பயன்படுத்தி குண்டர்களைத் துரத்தியடித்தனர்.

Siragu chakali ilamma2
அதில் சாக்கிலி இல்லமா தெலுங்கானா போராட்டத்தில் முக்கியமாக குறிப்படவேண்டிய பெண் போராளி.

இராமச்சந்திர ரெட்டி எனும் ஜமீன்தாரை எதிர்த்து தன் 4 ஏக்கர் நிலத்தை அவர் அபகரிக்க நினைத்தபோது எதிர்த்துப் வீரத்தோடு போராடியவர். நில உடமையாளர்களை எதிர்த்து தெலுங்கானா பகுதியில் போராடிய பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தப் போராளி.

சாக்கிலி இல்லமா கிருட்டிணபுரம் எனும் சிற்றூரில் வாராங்கல் மாவட்டத்தில் தெலுங்கானா மாநிலத்தில் 1919 ஆம் ஆண்டு பிறந்தார்.

சாக்கிலி இல்லமா ஒரு சமூக செயற்பாட்டாளராக ஆந்திர மாகாசபை மற்றும் பொதுவுடைமை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். நிசாம் அரசிற்கு எதிராகப் போராடியவர். நில உடைமையாளர்களை எதிர்த்து திட்டங்கள் அவர் வீட்டில்தான் அன்றைய காலக்கட்டங்களில் தீட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலை ஏலிகாட்டே சங்கர் ராவ் என்பவர் உழவர்களின் போராளி, சாக்கிலி இல்லமா எனும் தலைப்பிட்டு எழுதியுள்ளார்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இவரைத் தெரியுமா? சாக்கிலி இல்லமா”

அதிகம் படித்தது