மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஈஷா மையத்திற்கு நோட்டீஸ்: விதிமுறைகளை மீறி வெள்ளியிங்கிரி மலையில் கட்டடம்



Mar 3, 2017

விதிமுறைகளை மீறி வெள்ளியிங்கிரி மலையில் கட்டடம் கட்டியது தொடர்பாக, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.முத்தம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார்.

Siva adiyogi

வெள்ளியிங்கிரி மலைப்பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைபிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கிராமத்தில் மூன்று ஏக்கர் பரப்பில் 112 அடி உயர சிவன் சிலை மற்றும் அதைச் சுற்றி அமைந்த தியான மண்டபங்கள், பார்க்கின், பூங்கா போன்றவை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது.

விதிகளை மீறி அமைக்கப்பட்ட இந்த கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கு இன்று(03.03.17) விசாரணைக்கு வருகிறது. இதன் தொடர்பாக ஈஷா யோகா மையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஈஷா மையத்திற்கு நோட்டீஸ்: விதிமுறைகளை மீறி வெள்ளியிங்கிரி மலையில் கட்டடம்”

அதிகம் படித்தது