மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது



Mar 27, 2017

மத்திய மாநில திட்டங்கள், மற்றும் வங்கிக்கணக்கு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

siragu-aadhar

அவ்வகையில், புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 முதல் ஆதார் எண் கட்டாயம், சமையல் எரிவாயுக்கான மானியம் பெற, முதியோர் ஓய்வூதியம் பெற, நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன்பெற, ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற, வங்கிக்கணக்கு துவங்குவதற்கு, வருமான வரி தாக்கல் செய்ய, பான் கார்டு பெற, பாஸ்போர்ட் பெற, அஞ்சல்துறை சேவைகளைப் பெற, மொபைல் மற்றும் தொலைபேசி இணைப்பு பெற, மாணவர்களின் மதிய உணவு திட்டத்திற்கு என்று அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று(27.03.17) உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும் வங்கிக் கணக்கு போன்ற திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பதை தடை செய்யவும் முடியாது என்று கூறியுள்ளது உச்சநீதிமன்றம். ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்வதற்கு ஏழு நீதிபதிகள் கொண்ட குழு வைப்பது தற்போது சாத்தியமில்லை என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது”

அதிகம் படித்தது