மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: காவிரியில் 2000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு



Mar 21, 2017

பிப்ரவரி 7ம் தேதியிலிருந்து காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இதில் தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க மூன்று வாரம் அவகாசம் அளிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தது.

Siragu cauvery

அதன்படி பிப்ரவரி 7ம் தேதி துவங்கிய காவிரி வழக்கின் விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா, அமிதவராய் கன்வில்கர் அமர்வு முன்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணையில் ஜூலை 11 வரை காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தினமும் 2000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு.

தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் வழங்காமல் இருப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. இவ்வழக்கை ஜூலை 11க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: காவிரியில் 2000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு”

அதிகம் படித்தது