மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: காவிரி வழக்கு மார்ச் 21க்கு ஒத்திவைப்பு



Feb 7, 2017

காவிரி நடுவர் மன்றம் தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா மற்றும் தமிழகம் மேல்முறையீடு செய்தன. மேலும் இவற்றை விசாரிக்க அரசியல் சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என டிசம்பர் 9ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

siragu-supreme-court

நடுவர் மன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை. தண்ணீர் திறந்து விடாததால் கர்நாடக அரசு 2480 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முறையீடு செய்தது தமிழக அரசு. இந்த அனைத்து காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அத்தனை வழக்குகளும் இன்று முதல் விசாரணை தொடங்கியுள்ளது.

இவ்வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கன்வல்கர், அமிதவா ராய் அடங்கிய குழு விசாரணை செய்து வருகிறது. இதனையடுத்து இவ்வழக்கை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 21 முதல் ஏப்ரல் 11 வரை தினமும் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: காவிரி வழக்கு மார்ச் 21க்கு ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது