மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு



Feb 6, 2017

ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி போன்றோருக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா.

Siragu sasikala

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஜெயலலிதா தரப்பு. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரின் தண்டனையையும் ரத்து செய்து தீர்ப்பளித்தார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று(05.02.17) அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.பின் வருகிற 9ம் தேதிக்குள் தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பார் என்ற செய்தி வெளியானது.

சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு சசிகலாவுக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: ஜெ., சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு”

அதிகம் படித்தது