மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: தமிக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை



Jan 31, 2017

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து, அதனை தமிழக சட்டசபையில் சட்டமாக இயற்றியது. இதையடுத்து இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

siragu-jallikkattu3

மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அறிக்கையை ரத்து செய்து, அதனை உச்சநீதிமன்றத்திற்கும் தெரிவித்தது. ஆனால் இதனை பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை(27.01.2017)ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. தமிழக வழக்கறிஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை கோரியது கியுப்பா அமைப்பு.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், 2014ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மாறாக உள்ளது என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் மத்திய அரசு, ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கையை ரத்து செய்ததற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. எனவே ஜல்லிக்கட்டு மீதான தடை விலகியது.

மேலும் ஜல்லிக்கட்டு சட்டத்தை தமிழக அரசு ஏன் இயற்றியது என்பது குறித்த விளக்கத்தை ஆறு வாரங்களுக்கு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: தமிக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை இல்லை”

அதிகம் படித்தது