மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி: ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதில் ஏற்படும் பாதிப்பிற்கு என்ன நடவடிக்கை?



Nov 15, 2016

மத்திய அரசு பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற்றதற்கு எதிராக, சங்கம்லால் பாண்டே, விவேக் நாராயணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வழக்கு தொடர்ந்தனர். மேலும் மத்திய அரசு சார்பில் அபிடவிட் என்பவர் எங்களின் கருத்தைக் கேட்காமல் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கூடாது என்று மனு தாக்கல் செய்தார்.

siragu-supreme-court

இன்று இவ்வழக்கின் விசாரணையின்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் அனைவரும் கருப்பு பணம் வைத்திருப்பவர் அல்ல என்றும், மேலும் மத்திய அரசு எடுக்கும் முடிவில் தலையிட முடியாது என்றும், பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் மக்களுக்கு ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுதலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இச்சூழ்நிலைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று நவம்பர் 18ந்தேதிக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கூறி, இவ்வழக்கை நவம்பர் 25ந்தேதி ஒத்திவைத்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி: ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதில் ஏற்படும் பாதிப்பிற்கு என்ன நடவடிக்கை?”

அதிகம் படித்தது