மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: வரி ஏய்ப்பை தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம்



Apr 27, 2017

மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

Siragu Supreme_Court_of_India

இவ்வழக்கின் விசாரணையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது என்றும், ஆதார் எண்ணை கட்டாயமாக்கக்கூடாது என்று பல முறை உத்தரவிட்டும் மத்திய அரசு ஆதார் எண்ணை அவசியம் என்று கூறுவது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, வரி ஏய்ப்பு நடப்பதை சுட்டிக்காட்டியது மத்திய அரசு தரப்பு. இதில் வரி ஏய்ப்பு வெட்கக்கேடானது என்றும், புரிந்து கொண்டதாகவும் கூறி வரி ஏய்ப்பை தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: வரி ஏய்ப்பை தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது அவசியம்”

அதிகம் படித்தது