மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: விவசாயிகள் தற்கொலை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்



May 3, 2017

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக 300க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

Siragu Supreme_Court_of_India

விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அச்சமயம் வாதாடிய தமிழக அரசு வழக்கறிஞர், வறட்சியால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை என்றும், உடல் நல குறைவு காரணமாகவே உயிரிழந்தனர் என்று வாதாடினார்.

விவசாயிகள் தற்கொலை குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை மே 2ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.

இதில் தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். விவசாயிகள் தற்கொலை குறித்த பதிலை வரும் திங்கட்கிழமைக்குள் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: விவசாயிகள் தற்கொலை குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்”

அதிகம் படித்தது