மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்றம் உத்தரவு: போராட்டத்தைக் கைவிடாத மருத்துவ சங்கங்கள் மீது நடவடிக்கை



May 6, 2017

முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Siragu-madras-high-court

இப்போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தும் மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தப்பட்டப் பிறகு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சில மருத்துவ சங்கங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர்.

ஆனால் சில மருத்துவ சங்கங்கள் போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டத்தைக் கைவிடாத மருத்துவ சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை நடத்தும் மருத்துவ ஊழியர் சங்கத்தினர் மீது எஸ்மா சட்டத்தை பிரயோகிக்கும்படி உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம் உத்தரவு: போராட்டத்தைக் கைவிடாத மருத்துவ சங்கங்கள் மீது நடவடிக்கை”

அதிகம் படித்தது