மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்றம்: தொழிற்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பிக்க முடியாதவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்



Apr 27, 2017

இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

Siragu gay5

வரும் மே மாதம் 7ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1ம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் 25வயதுக்குக்கும் மேற்பட்டோர் இத்தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் வழக்கின் விசாரணையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 1 முதல் 5 வரை ஐந்து நாட்கள் நீடித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 38 பேர், தொழிற்நுட்ப கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சிபிஎஸ்இ இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம்: தொழிற்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பிக்க முடியாதவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்”

அதிகம் படித்தது