மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்றம்: நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்துக்கு மாற்றப்பட்ட மதுக்கடைகளை திறக்க தடை



May 4, 2017

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள் பல நிகழ்கிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

Siragu tasmac

இதனையடுத்து ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 3500 மதுக்கடைகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மதுக்கடை ஊழியர்களின் வேலை இழந்ததாகவும், மூடப்பட்ட மதுக்கடைகளில் உள்ள சரக்குகளை குடிமகன்கள் திருடி செல்வதாலும் கிராமத்தில் இக்கடைகளை மாற்றுவதற்காக இடம் பார்த்து வந்தனர்.

கிராமத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராம மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதில் நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட பத்து மதுக்கடைகளை திறக்க தடை விதித்தது உயர்நீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம்: நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்துக்கு மாற்றப்பட்ட மதுக்கடைகளை திறக்க தடை”

அதிகம் படித்தது