மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்றம்: பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் தளர்வு



Mar 28, 2017

சென்னை உயர்நீதிமன்றத்தில், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பதிவுசெய்ய தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Siragu madras-high-court

இதன்பின் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் பத்திரப்பதிவு தடையை நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கின் விசாரணையில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகப் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ரியல் எஸ்டேட் சார்பில் வாதிடப்பட்டது.

இவ்வழக்கில் இத்தடையால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்தவும் தமிழக அரசுக்கு அவகாசம் அளித்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம்.

பின் அங்கீகாரம் இல்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும், பத்திரப்பதிவு செய்ய புதிய விதிகள் வகுக்கப்படும் என்றும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

இதனை ஏற்று 2016 அக்டோபர் 23ம் தேதிக்கு முன்பு பதிவு செய்த மனைகளுக்கு இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளித்துள்ளது. மேலும் சாலைக்கு 22 அடி விட வேண்டும் என்பதில் என்ற மாற்றமும் இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலங்களை வரைமுறைப்படுத்த அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்ததையடுத்து இவ்வழக்கை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம்: பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் தளர்வு”

அதிகம் படித்தது