மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்றம்: 50% இடங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகள் அரசுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்



May 2, 2017

சென்னை உயர்நீதிமன்றத்தில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு இடஒதுக்கீட்டுக்கு இடம் ஒதுக்காததால் தகுதி உள்ளவர்கள் எம்.டி, எம்.எஸ் சேர முடியவில்லை என்று நாமக்கல் டாக்டர் காமராஜ் வழக்கு தொடர்ந்தார்.

Siragu madras-high-court

தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இட ஒதுக்கீடு கேட்டு பெறாததால் தகுதி உள்ளோர் எம்.டி, எம்.எஸ் சேர முடியவில்லை. இதில் தமிழக அரசும், கல்லூரிகளும், இந்திய மருத்துவ கவுன்சிலும் விதிகளை பின்பற்றவில்லை.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசுக்கு இடஒதுக்கீட்டு கேட்டு பெறாத தமிழக அரசு மற்றும் இடஒதுக்கீட்டு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம்.

தமிழக அரசின் ஒரு கோடி அபராத தொகையை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிக்கு பயன்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம்: 50% இடங்களை தனியார் மருத்துவக்கல்லூரிகள் அரசுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும்”

அதிகம் படித்தது