மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எடப்பாடி K. பழனிச்சாமி தமிழக முதல்வரானார்



Feb 16, 2017

தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று(16.02.17) அழைப்பு விடுத்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதையடுத்து 30 பேர் கொண்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

Siragu edappadi-palanisamy2

அமைச்சரவையில் புதியதாக கே.ஏ.செங்கோட்டையன் இடம் பெற்றுள்ளார். இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன் தவிர மற்ற அமைச்சர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அதே துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று மாலை எடப்பாடி K.பழனிச்சாமிக்கு தமிழக முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர். இவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி – முதல்வர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள், திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை, கே.ஏ.செங்கோட்டையன் – பள்ளி கல்வித்துறை, செல்லூர் ராஜூ – கூட்டுறவு துறை, தங்கமணி – மின்துறை மற்றும் மதுவிலக்கு, எஸ்.பி.வேலுமணி – உள்ளாட்சித்துறை, ஜெயக்குமார் – மீன்வளத்துறை, சி.வி. சண்முகம் – சட்டத்துறை, அன்பழகன் – உயர்கல்வித் துறை, சரோஜா – சமூக நலத்துறை, எம்.சி. சம்பத் – தொழில்துறை, கருப்பண்ணன் – சுற்றுச்சூழல், காமராஜ் – உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம், ஓ.எஸ்.மணியன் – கைத்தறி மற்றும் ஜவுளித்துறை, உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு, விஜயபாஸ்கர் –சுகாதாரத்துறை, துரைக்கண்ணு – விவசாயத்துறை, கடம்பூர் ராஜூ- செய்தித் துறை, உதயகுமார் – வருவாய்த்துறை, வெள்ளமண்டி நடராஜன் – சுற்றுலாத்துறை, வீரமணி – வணிக வரித்துறை, ராஜேந்திர பாலாஜி – பால்வளத்துறை, பெஞ்சமின் – ஊரக தொழில்துறை, நிலோபர் கபில் – பணியாளர் நலத்துறை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்துத் துறை, மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பத்துறை, ராஜலட்சுமி – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை, பாஸ்கரன் –காதித்துறை, சேவூர் ராமச்சந்திரன் –அறநிலையத்துறை, வளர்மதி – பிற்பட்டோர் நலத்துறை, பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எடப்பாடி K. பழனிச்சாமி தமிழக முதல்வரானார்”

அதிகம் படித்தது