மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எண்ணூர் அருகே கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் கடலூர் மற்றும் புதுச்சேரி வரை பரவியது



Feb 17, 2017

கடந்தஜனவரி 27ம் தேதி சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மும்பையிலிருந்து கச்சாஎண்ணெயை ஏற்றிக்கொண்டு எண்ணூர் நோக்கி வந்த கப்பல் மீது ஈரான் கப்பல்மோதியது. இதனால் மும்பையிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்சேதமடைந்தது.

Siragu oil

இதனால்அக்கப்பலில் இருந்த 40 டன் கச்சா எண்ணெய் கடலில் பரவியது. சென்னைஎண்ணூரிலிருந்து மகாபலிபுரம் வரை உள்ள கடற்பரப்பு மாசடைந்தது. இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

எண்ணெய் அகற்றும் பணி முடிவடைந்தது என்று தமிழக அரசும், துறைமுக அதிகாரிகளும் தெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த எண்ணெய் படலம் கடலூர் மற்றும் புதுச்சேரி வரை பரவியுள்ளது தெரியவந்துள்ளது. அப்பகுதி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை நீக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எண்ணூர் அருகே கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் கடலூர் மற்றும் புதுச்சேரி வரை பரவியது”

அதிகம் படித்தது