மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 16வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது



Dec 8, 2016

நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடுமுழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

siragu-rajya-sabha

இதனையடுத்து கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிகாலக்கூட்டத்தொடர் துவங்கியது. துவங்கிய நாள் முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

ரூபாய் நோட்டு பிரச்சனையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டு விவாதம் நடத்த வேண்டும் எனவும், பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் முழக்கமிட்டனர். இதன் பிறகு இரு முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு முடிவில் நாள் முழுவதும் அவை ஒத்தவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எதிர்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 16வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது”

அதிகம் படித்தது