மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எதிர்கட்சிகள் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு



Nov 28, 2016

நவம்பர் 8ம் தேதி500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 16ம் தேதி குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது.

siragu-parliament

இக்கூட்டம் ஆரம்பித்த நாள்முதல் ரூபாய் நோட்டு விவகாரம் காரணமாக எதிர்கட்சிகள் அமளியால் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று 9ம் நாளாக 11 மணியளவில் ராஜ்யசபா துவங்கியது. இதில் எதிர்கட்சி எம்.பி.க்கள், மோடி அவைக்கு வர வேண்டும் என்றும், ரூபாய் நோட்டு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் கூச்சலிட்டனர். சபாநாயகர் கட்டுப்படுத்த முயன்றும் முடியாததால் 12 மணிக்கும், பின் அதனை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட அவை அமளியால் 2 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து லோக்சபாவும் எதிர்கட்சிகளின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எதிர்கட்சிகள் அமளியால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது