மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் போலீசார் குவிப்பு



Feb 15, 2017

சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர்கள் எம்.எல்.ஏ-க்களை கடத்தி வைத்திருப்பதாக, மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Siragu koovathur resort

இதையடுத்து கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் அதிரடிப்படை போலீசார் உட்பட அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஐ.ஜி.தாமரைக் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசி ரிசார்ட்டுக்குள் சென்று எம்.எல்.ஏ-க்களுடன் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் தங்களை யாரும் கடத்தவில்லை என்றும், தாங்கள் விருப்பத்துடனே தங்கியிருக்கிறோம் என்றும் தெரிவித்தனர். மேலும் ஆளுநர் அழைக்கும் பொழுது இங்கிருந்து வெளியேறுவோம் என்று கூறியுள்ளனர் அங்கே தங்கியுள்ள எம்.எல்.ஏ.-க்கள்.

இதையடுத்து போலீசாருக்கும் அதிமுக-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ-க்களைத் தவிர மற்றவரை வெளியனுப்பினர் காவல் துறையினர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எம்.எல்.ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் போலீசார் குவிப்பு”

அதிகம் படித்தது