மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏப்ரல் 1லிருந்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் ரொக்கத்தில் நகை வாங்கினால் 1 சதவீதம் வரி



Feb 21, 2017

2016-17 பட்ஜெட் அறிவிப்பில் ரூ.2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் 1 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியது. இதற்கு எதிர்ப்பு இருந்ததால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 1 தேதி இதனை வாபஸ் பெற்றது.

Siragu goldஇந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. இதனால் ரூ. 3 லட்சத்திற்கும் மேல் ரொக்கமாக பண பரிவர்த்தனைக்கு தடை விதித்தது.

இதையடுத்து 2017-18 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ. 2 லட்சத்திற்கும் மேல் ரொக்கமாகக் கொடுத்து எந்தவொரு பொருளையோ அல்லது சேவையோ பெற்றால் 1 சதவீத வரி விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். எந்தவொரு பொருட்களில் நகைகளும் அடங்கும் என்று நிதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிதி மசோதா நிறைவேறிவிட்டால் இது ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துவிடும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏப்ரல் 1லிருந்து ரூ.2 லட்சத்திற்கும் மேல் ரொக்கத்தில் நகை வாங்கினால் 1 சதவீதம் வரி”

அதிகம் படித்தது