மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏப்ரல் 30க்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்



Apr 12, 2017

ஜூலை 2014 முதல் ஆகஸ்டு 2015 வரையில் வங்கிக்கணக்கு துவங்கியவர்கள் தங்களது ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

siragu-aadhar

ஆதார் எண், KYC படிவத்தை பூர்த்தி செய்தும் மற்றும் FACTA கட்டுப்பாடுகளின் ஒப்புதலுக்கான கையொப்பமிட்ட சான்றிதழையும் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

ஏப்ரல் 30க்குள் இதனை செய்ய தவறினால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்ட வெளிநாட்டு வரி இணங்குதல் சட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதின் மூலமாக இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏப்ரல் 30க்குள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்”

அதிகம் படித்தது