மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கிலிருந்து தயாநிதி, கலாநிதி விடுவிப்பு



Feb 2, 2017

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனின் நிறுவனமான ஏர்செல் பங்குகளை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. அப்போது மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார்.

Siragu maran-brothers

சவுத் ஏசியா எப்எம் லிமிடெட், சன் டிரைக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு மொரிசியஸ் நிறுவனங்களிடமிருந்து ரூ.742.58 கோடி கைமாறியுள்ளதாக அமலாக்கப்பிரிவில் சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்குகளில் முன் ஜாமீன் கேட்டு கலாநிதி மாறன், தயாநிதி மாறன், கலாநிதி மாறனின் மனைவி காவேரி உள்ளிட்டோர் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நீதிமன்றம், தீர்ப்பை இன்று ஒத்திவைத்தது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பை அளித்தார் நீதிபதி ஓபி ஷைனி. இத்தீர்ப்பின்படி ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கிலிருந்து தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கிலிருந்து தயாநிதி, கலாநிதி விடுவிப்பு”

அதிகம் படித்தது