மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஓ.பி.எஸ். அணி: எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, செல்லார் ராஜு உள்ளிட்ட 13 பேர் அதிமுக-விலிருந்து நீக்கம்



Feb 17, 2017

சசிகலா அணி மற்றும் ஓ.பி.எஸ். அணி என்று இரண்டாக பிரிந்தது அதிமுக கட்சி. இதனால் சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று மாறி மாறி அதிமுக கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்து வருகிறார்கள்.

Siragu madhusudhanan

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சசிகலா, தினகரன், வெங்கடேஷ் போன்றோரை அதிமுக-விலிருந்து நீக்கினார். மேலும் 7 மாவட்ட செயலர் உட்பட 13 மூத்த தலைவர்களை அதிமுக-விலிருந்து நீக்கியதாக அறிவித்துள்ளது ஓ.பி.எஸ். அணி.

அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொறடா அரியலூர் ராஜேந்திரன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, வளர்மதி, எம்.பி. நவநீத கிருஷ்ணன் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் ராஜு போன்றோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஓ.பி.எஸ். அணி: எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை, செல்லார் ராஜு உள்ளிட்ட 13 பேர் அதிமுக-விலிருந்து நீக்கம்”

அதிகம் படித்தது