மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்: அகற்றும் பணி நடந்து வருகிறது



Feb 2, 2017

கடந்த 27ம் தேதி சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மும்பையிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு எண்ணூர் நோக்கி வந்த கப்பல் மீது ஈரான் கப்பல் மோதியது. இதனால் மும்பையிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதமடைந்தது.

Siragu oil

இதனால் அக்கப்பலில் இருந்த 40 டன் கச்சா எண்ணெய் கடலில் பரவியது. சென்னை எண்ணூரிலிருந்து திருவான்மியூர் வரை உள்ள கடற்பரப்பு மாசடைந்துள்ளது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பலியாகியது. கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் கடலோர காவல் படையினரும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஏழு நாட்களாக எண்ணெய் அகற்றும் பணி நடந்து வந்தும் இன்னும் சரியாகாத நிலை உள்ளது. கடலில் போடப்பட்ட வலைகளின் எண்ணெய் படிந்துள்ளதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்: அகற்றும் பணி நடந்து வருகிறது”

அதிகம் படித்தது