மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கத்திரி வெயில் மே 4ம் தேதியிலிருந்து 28 வரை நீடிக்கும்



May 2, 2017

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்தே ஆரம்பித்து விட்டது. மார்ச் மாதத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Siragu hot1

திருவள்ளூரில் அதிகபட்ச வெப்பநிலையாக 113 டிகிரி பதிவாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை கடந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4 ம் தேதி துவங்குகிறது. இந்த கத்திரி வெயில் மே 28 வரை நீடுக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பகல் நேரங்களில் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கத்திரி வெயில் மே 4ம் தேதியிலிருந்து 28 வரை நீடிக்கும்”

அதிகம் படித்தது