மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவர்னர் இன்று சென்னை வருகை: ஓ.பி.எஸ், சசிகலா, எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் கவர்னரை சந்திக்க உள்ளனர்



Feb 9, 2017

சசிகலா மிரட்டி ராஜினாமா செய்யவைத்தார் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதை அடுத்து, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும், மக்கள் விரும்பினால் ராஜினாமாவை திரும்பப் பெறுவேன் என்று கூறியுள்ளார்.

Siragu vidyasagar-rao

இந்நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 5மணிக்கு சசிகலா எம்.எல்.ஏ-க்களுடன் ஆளுநரை சந்திக்க உள்ளார்.

மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்து தான் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை அறிவிக்க உள்ளார்.

இச்சூழலில் நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏ கூட்டம் முடிந்தபின், சசிகலா எம்.எல்.ஏ-க்களை இரண்டு பேருந்துகளில் அழைத்து ஹோட்டல்களில் தங்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவர்னர் இன்று சென்னை வருகை: ஓ.பி.எஸ், சசிகலா, எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் கவர்னரை சந்திக்க உள்ளனர்”

அதிகம் படித்தது