மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி



Mar 7, 2017

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது கர்நாடக அரசு. இந்த அணை கட்டுவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், மேலும் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காது போன்ற காரணங்களால் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு காட்டி வருகிறார்கள் விவசாயிகள்.

Siragu cauvery

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஆறாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது கர்நாடக அரசு. கர்நாடகத்திற்கு சட்ட ரீதியாகவும், தொழிற்நுட்ப ரீதியாகவும் அணை கட்ட முழு உரிமை உண்டு என்றும் கர்நாடக எல்லைக்குள் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறியுள்ளார்.

எனவே காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ஒக்கேனக்கலில் பேருந்து நிலையத்திலிருந்து முதலைப்பண்ணை வரை விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி”

அதிகம் படித்தது