மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது



May 10, 2017

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் ஒகேனக்கல் மெயின் அருவி ஐந்தருவி பகுதிகளில் வெறும் பாறைகளாகவே காணப்பட்டது. எனவே கோடை விடுமுறைக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்தது.

Siragu Hogenakkal

இந்நிலையில் நேற்று இரவு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது. அவ்வகையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் மற்றும் அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் காவிரி ஆற்றில் தற்போது நீர் வரத் துவங்கியுள்ளது. எனவே ஒகேனக்கல் மெயின் அருவி ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து பாய்கிறது. ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணைக்கு வருவதற்கு சுமார் 6 மணி நேரம் ஆகும். பின் இன்று மலைக்குள் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கலில் தண்ணீர் ஆர்ப்பரிக்கிறது”

அதிகம் படித்தது