மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல்: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை



Apr 27, 2017

நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியான பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

siragu-pakistan2

குப்வாரா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது இன்று(27.04.17) அதிகாலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கரமான மோதல் நடந்தது.

இந்த தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுவதால் காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது பெரும் சவாலாக உள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என்று ஸ்ரீநகரில் ராணுவ முகாமின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சந்து கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல்: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை”

அதிகம் படித்தது