மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் போராட்டம்



Apr 8, 2017

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதியில் சில நாட்களாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதிப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

Siragu water

யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட இப்போராட்டத்தில், பழுதான ஆழ்துளை கிணறு மின் மோட்டார்களை சரிசெய்ய வேண்டும், சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும் என்று கூச்சலிட்டனர்.

வட்டார வளர்ச்சி பொருளாளர் மாரியப்பன் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களிடம் கூறியதால் கலைந்து சென்றனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் சரியாக இல்லை என்பதால் அப்பகுதி மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து வட்டார வளர்ச்சு அலுவலர் சில நாட்களில் புதிய போர்வெல் அமைத்து தண்ணீர் வழங்கப்படும் என்றும் கூறியதின் பெயரில் மக்கள் கலைந்து சென்றனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடிநீர் தட்டுப்பாட்டால் பெண்கள் போராட்டம்”

அதிகம் படித்தது