மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குடும்ப அட்டையில் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வாய்ப்பு



Feb 3, 2017

ஏப்ரல் முதல் தமிழகத்தில் குடும்ப அட்டை ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவத்தில் வழங்கப்பட உள்ளது. அதனால் குடும்ப அட்டை உள்ளவர்களிடமிருந்து ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் பெறப்படுகிறது.

Siragu ration card with aadhar number

இந்த விவரங்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் உள்ள டி.என்.இ.பி.டி.எஸ் என்ற மொபைல் ஆப் மூலம் பதியப்படுகிறது. ஆனால் இது வரை நான்கு லட்சம் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள், தங்களது விவரங்களை அளிக்கவில்லை. எனவே அவர்களது ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது.

எனவே இவர்கள் தங்களது ஆதார் விவரங்களை அளிக்க ரேஷன் கடை மற்றும் உணவு வழங்கல் அலுவலகத்துக்கும் செல்வது அவர்களுக்கு சிரமத்தைத் தருகிறது.

இவர்களின் சிரமத்தைப் போக்க கடைசியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் ஆதார் விவரங்கள் பதியாதவர்கள், ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு நகலுடன் தொலைபேசி எண், ரேஷன் கடை எண்ணை ஒரு தாளில் எழுதி உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அலுவலக ஊழியர்கள் அந்த விவரத்தை பதிவு செய்து தகவல் தெரிவிப்பார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடும்ப அட்டையில் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வாய்ப்பு”

அதிகம் படித்தது