மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குட்டிக்கரணம் போட்டு தமிழக விவசாயிகள் போராட்டம்



Apr 13, 2017

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறர்கள்.

Siragu-farmers

31 நாட்களாக நடைபெறும் இப்போராட்டத்தை தேசிய தென்னிந்திய நதிகளை இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். விவசாயிகள் பல்வேறு வடிவங்களில் இப்போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

அவ்வகையில் இன்று குட்டிக்கரணம் போட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள் போராடும் விவசாயிகள். இந்நிலையில் சென்னையில் சில இடங்களில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர் அமைப்பினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை- கிண்டி கத்திப்பாரா மேம்பாலம், நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன், அண்ணாசாலை மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் போன்ற இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குட்டிக்கரணம் போட்டு தமிழக விவசாயிகள் போராட்டம்”

அதிகம் படித்தது