மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கேரளாவில் அவசரச்சட்டம்: பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்



Apr 11, 2017

கேரளாவில் உள்ள பல்வேறு பள்ளிகளில் மலையாளம் பேசுவதை தடை செய்வதாகவும், ஆங்கிலத்தில் பேசுவதை ஊக்குவிப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

Siragu keralaa school

இதனையடுத்து கேரள மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ பாடப்பிரிவு கற்றுத்தரும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2 வரை மலையாளம் பாடம் கட்டாயம் என அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த சட்டம் மே 1 முதல் அமலுக்கு வருவதாக அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தை மீறும் பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் சதாசிவம் இன்று(11.04.17) ஒப்புதல் வழங்கியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கேரளாவில் அவசரச்சட்டம்: பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்”

அதிகம் படித்தது